வீட்டுக்கு வந்த அரிசி பை – அதிர்ச்சியில் ராயபுரம் மக்கள் 

0 12

சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் குடிசைப்பகுதியில் குப்பைகளாடு குப்பையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை போலீஸார் மீட்டுள்ளனர் சிலையைக் கடத்தியவர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர் சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியில் நேற்றிரவு போலீஸ் வாகனம் வந்தது அதிலிருந்து இறங்கிய போலீஸார் அந்தப் பகுதியில் குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்திவரும் பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தனர் அவர் பொறுக்கி வைத்திருந்த குப்பையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அரிசி பையில் 4 அடி உயரம் 60 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை போலீஸார் மீட்டனர் இதையடுத்து சிலையை ராயபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸார் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்  ஐம்பொன் சிலை எப்படி அங்கு வந்தது என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினசிலை குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி கூறுகையில் “சிலையை கொண்டு வந்த நபர் குப்பையில் அரிசி பையில் வைத்து மறைத்துவைத்துள்ளார் அப்போது குப்பையைப் பொறுக்கி குடும்பத்தை நடத்தும் அந்தப் பெண் அதை எடுத்துள்ளார் அப்போதுதான் அரிசி பையை தூக்கிப் பார்த்தபோது வெயிட்டாக இருந்தது திறந்துபார்த்தபோதுதான் அது சிலை எனத் தெரியவந்தது உடனே போலீஸுக்குத் தகவல் தெரிவித்தோம் அவர்கள் வந்து சிலையை மீட்டுள்ளனர் என்றார்இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் “நேற்றிரவு அரிசி பையில் சிலையை மறைத்து வைத்து கொண்டுவந்தார் அரிசி பையில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் இருப்பதாகக் கூறினார் பையைத் திறந்து பார்த்தபோதுதான் உள்ளே சிலை இருந்தது தெரியவந்தது இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் உடனடியாக அரிசி பையை எங்கு எடுத்து வந்தாய் என்று கேட்டோம் இதனால் பையை எடுத்துக்கொண்டு அவர் குப்பையின் நடுவில் மறைத்து வைத்தார் இந்தச் சம்பவம் போலீஸாருக்குத் தெரியவந்ததும் சிலையை மீட்டுள்ளனர்ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன அங்கு வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர் இந்தநிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலையை ஏன்  கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இங்கு மறைத்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி ஆனால் அதற்கு பதிலளிக்க வேண்டிய போலீஸார் சிலையை மட்டும் மீட்டுவிட்டு அமைதியாக இருக்கின்றனர் அரிசி பையில் வைத்து சிலையை தூக்கி வந்தவரிடம் விசாரித்தாலே அந்தச் சிலை எங்கிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டது என்ற தகவல் தெரியவாய்ப்புள்ளது ஆனால் காவல்துறை அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்றார்  இதுகுறித்து ராயபுரம் போலீஸாரிடம் கேட்டதற்கு “சிலையை மீட்டு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளோம் அவர்கள்தான் சிலை குறித்து விசாரிப்பார்கள் என்றனர்  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு “ராயபுரம் போலீஸார் மீட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் அது ராமர் சிலை என்பது தெரியவந்துள்ளது சிலை எப்படி அங்கு வந்தது என்று தெரியவில்லை சிலையைத் தூக்கி வந்ததாக அந்தப் பகுதி மக்கள் ஒருவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் அவரிடம் விசாரணை நடத்தி சிலை குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம் என்றனர் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்துள்ளது ஆனால் அவருக்கு எதிராக அந்தப் பிரிவில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்தச் சூழ்நிலையில் ராயபுரம் பகுதியில் ஐம்பொன் சிலை குப்பையோடு குப்பையாக மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

Leave A Reply

Your email address will not be published.