மானாமதுரை தொகுதி யார் வசம்…களமிறங்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்…!

0 6

மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காலியாக அறிவிக்கப்பட்டது நாடாளுமன்றத் தேர்தலோடு மானாமதுரை உள்பட 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி மானாமதுரை தொகுதியிலும் அடுத்த மாதம் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது இந்த தொகுதியில் திமுக அதிமுக அமமுக கட்சியினர் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கத் தயாராகி வருகிறார்கள் அந்தக் கட்சிகளின் சார்பில் யார் யாருக்கு சீட் என்பது பற்றிய ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் இதுசிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தனித் தொகுதியாகும் இந்தத் தொகுதி 1952-ல் உருவாக்கப்பட்டபோது முதன்முதலில் கிருஷ்ணசாமி அய்யங்கார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் போட்டியின்றி ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த பெருமை இந்தத் தொகுதிக்கும் இத்தொகுதியின் வாக்காளர்களுக்கும் உண்டு தொகுதி மறுசீரமைப்பில் இளையான்குடி தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு மானாமதுரையுடன் சேர்க்கப்பட்டது மானாமதுரை இளையான்குடி திருபுவனம் பேரூராட்சியும்  126 கிராமப் பஞ்சாயத்துகளும் இந்த தொகுதிக்குள் அடங்கியுள்ளது இந்தத் தொகுதி மக்களின் பிரதான தொழில் நெல் மிளகாய் தென்னை விவசாயம் மற்றும் செங்கல் சூளை கரிமூட்டம் போன்றவைதான் இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் பட்டியலினத்தவர் யாதவர் இஸ்லாமியர்கள் பிள்ளைமார் முத்தரையர் செட்டியார் மற்றும் இதர சமூகத்தினர் வசித்து வருகிறார்கள்வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் தமிழரசி ரவிக்குமார் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவர் கருணாநிதி அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் மதுரை புறநகர் திமுக மாவட்டச் செயலாளர் மூர்த்திக்கும் இவருக்கும் இடையே அரசியல் போர் கடுமையாக இருந்ததால் அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மானாமதுரை தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சொந்தக் கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளால் தோல்வியடைந்தார் திமுக மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் போன்றவர்கள் தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழரசி போட்டியிடாமல் இருப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது அதேநேரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்களிடம் எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவார் என்று பட்டியல் கேட்டிருக்கிறார் இளையான்குடி மானாமதுரை ஒன்றியச்செயலாளர்கள் தமிழரசி பெயரை முன்மொழிந்துள்ளனர் 39மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் இருக்கிறது இன்றுவரை தொகுதிக்குள் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்39 என்று சர்ட்பிகேட் கொடுத்திருக்கிறார்கள் கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட சித்திரைச் செல்வி முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகள் ஆவார் இவரும் மானாமதுரை இடைத்தேர்தலில் சீட் கேட்டிருக்கிறார் கீழநெட்டூர் அய்யாச்சாமி வழக்கறிஞர் கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து போன்றோரும் சீட் பெறுவதில் தீவிரம் காட்டிவருகிறார்கள்அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் இந்த தொகுதியில் இருந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்எல்ஏ-வாக இருக்கும்போது பெண் விவகாரத்தில் சிக்கினார் அந்தப் பெண் குடும்பத்தார் கூலிப்படையை வைத்து இவரை சரமாரியாக வெட்டியதில் உயிர் தப்பினார் இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அந்த எப்ஐஆர்-ஐ எடுத்துக்கொண்டு போய் ஜெயலலிதாவிடம் காண்பித்து மீண்டும் குணசேகரனுக்கு சீட் கிடைக்க விடாமல் செய்தவர் மாரியப்பன் கென்னடி மானாமதுரை முன்னாள் யூனியன் சேர்மன் மாரிமுத்து உள்ளுர்க்காரராக இருந்தாலும் இருப்பதெல்லாம் சென்னையில்தான் இவர் அங்கிருந்து வரும்போதே மானாமதுரை யூனியன் சேர்மன் வேட்பாளராக வந்தவர் அந்த அளவுக்குக் கட்சி தலைமையுடன் தொடர்பு வைத்திருக்கிறார் இதேதொகுதியில் மூன்று முறை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த விஎம்சுப்பிரமணியன் மகள் பாக்கியலட்சுமி அழகுமலை இவர் திருப்புவனம் யூனியன் சேர்மனாக இருந்தவர் எனவே இவரும் அதிமுக சார்பில் போட்டியிட தலைமைக்கழகத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்அமமுக சார்பில்  பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வான மாரியப்பன் கென்னடி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார் தொகுதி மக்களிடம் ஓரளவுக்கு நல்ல செல்வாக்கைப் பெற்றிருக்கிறார் அதேநேரத்தில் தொகுதி மக்களுக்கு பதவியில் இருந்த நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற கோபம் இருக்கிறதுவேட்பாளருக்குக் காத்திருக்கும் சவால்கள்திருப்புவனத்தில் பேருந்து நிலையம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்த அறிவிப்பு கிடப்பில் இருப்பது மானாமதுரை கன்னார்தெருவையும் கிருஷ்ணராஜபுரத்தையும் இணைக்கும் தரைப்பாலம் அமைத்தல் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பேருந்து பணிமனை முழுமையாகச் செயல்படுத்தப்படாதது போன்றவை முக்கியப் பிரச்னைகளாகும் வைகை ஆற்றில் மூன்று முறை தண்ணீர் வந்தும் இந்தத் தொகுதிக்குள் இருக்கக்கூடிய பெரிய கண்மாய்களான கீழமேல்குடி கிருங்காகோட்டை முத்தனேந்தல் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படாததால் விவசாயம் செய்யமுடியாமல் தரிசு நிலமானது மானாமதுரைக்கு அரசுக் கலைக்கல்லூரி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட மடப்புரம் காளிகோவிலில் சுகாதாரக்கேடு என பல்வேறு பிரச்சனைகளும் இந்தத் தொகுதி வேட்பாளர்களின் முன் உள்ள தலையாய பிரச்னைகளாகத் தலைதூக்கிக்கொண்டிருக்கின்றன 

Leave A Reply

Your email address will not be published.