அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படையினர் – அரியலூரில் 1,03,600 ரூபாய் பறிமுதல்

0 7

அரியலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1,03,600 ரூபாயைத் தேர்தல் கண்காணிப்புக் குழு பறிமுதல் செய்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் தேர்தல் பறக்கும் படையினர்                                                 17-வது நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 18 குழுக்களாகப் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.                                           அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே பறக்கும் படை அலுவலர் ராஜகோபால், காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில், போலீஸார் லூர்துசேவியர், கைலாசம், பாலமுருகன் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அரியலூரிலிருந்து  ஜெயங்கொண்டத்திற்குச் சென்ற டாடாஏஸ் வாகனத்தைச் சோதனை செய்ததில் வாகனத்திலிருந்து 1,03,600 ரூபாய்  உரிய ஆணவங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டது கண்டறியப்பட்டது.                                                    வாகனத்தில் வந்த செல்வகுமார் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருபதாயிரத்திற்கு மட்டுமே ஆவணம் உள்ளது என்றும், வியாபாரம் செய்துவிட்டு ஆவணங்கள் இல்லாமல் இப்பணம் கொண்டு செல்லப்படுவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர். சீல் வைக்கப்பட்ட பணம் அரியலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் பணம் திருப்பி தரப்படும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.                                                     இதனிடையே,இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதாக எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.