தேர்தலில் மகன் போட்டியிடுவதால் மத்திய அமைச்சர் பிரேந்தர் ராஜினாமா

0 5

புதுடெல்லி: மத்திய உருக்குத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மத்திய உருக்குத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங், அரியானாவின் ஹிசார் மக்களவை தொகுதி வேட்பாளராக பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கேபினட், மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுத்ரி, “ நான் கேபினட், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது குறித்து பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளேன்’ என்றார். தனது மகன் போட்டியிடுவதால் அமைச்சர் பிரேந்தர் சிங் பதவி விலகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.