16 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவித்தார் மாயாவதி

0 10

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ்- ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 37 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்தளம் 6 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தனது கட்சி சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பகுஜன் சமாஜ் நேற்று வெளியிட்டது. காசிப்பூர் தொகுதியில் சிறைக்கு சென்றுள்ள முக்தர் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரிக்கு, கட்சியின் தலைவர் மாயாவதி வாய்ப்பு வழங்கியுள்ளார். இம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தின் மொத்த மக்களவை தொகுதி எண்ணிக்கை 80.

Leave A Reply

Your email address will not be published.