வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி? வேட்பாளர் அறிவிக்காததால் எதிர்பார்ப்பு

0 11

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில், ‘கட்சி விருப்பப்பட்டால் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். இந்நிலையில், தற்போது 2019ம் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இன்னும் வாரணாசி தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் வாரணாசியில் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்று அக்கட்சியினரே கூறுகின்றனர். மேலும், உ.பி.யில் பிரியங்காவின் வரவால் காங்கிரசில் புது எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதை தக்கவைக்க, வாரணாசியில் அவர் களமிறங்குவதுதான் சிறப்பாக இருக்கும், கட்சியின் மூத்த தலைவர்களும் கருதுகின்றனர். பிரியங்கா, தற்போது கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளதால், அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.