மட்டமான அரசியல் செய்கிறார் பஞ்சாப் நலனில் அக்கறை இல்லாதவர் மோடி: முதல்வர் அம்ரிந்தர்சிங் தடாலடி

0 7

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநில முதல்வர் அம்ரிந்தர்சிங் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வோடு பிரசார இணை நிகழ்ச்சியை காங்கிரஸ் நடத்தியது. அதில் முதல்வர் அம்ரிந்தர்சிங் பேசுகையில், ‘‘பஞ்சாப் மாநில கோரிக்கைகளை பிரதமர் மோடி, செவி கொடுத்து கேட்பதே இல்லை. இந்த நினைவிடத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. மட்டமான அரசியலை பிரதமர் மோடி செய்து வருகிறார். மாநில மக்களின் நலனுக்காக நான் பலமுறை பிரதமரை அணுகியிருக்கிறேன். ஆனால், அவரோ பஞ்சாப் மக்களை கண்டுகொள்வதில்லை. அதேபோல், பிரதமர் மோடி, ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை தலைவராக இருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை தருகிறது’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.