‘மதவாதத்தை பயன்படுத்தி வாக்குகளை பெற பாஜ முயற்சி’

0 7

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் பகவான்கோலா பகுதியில் திரிணாமுல் கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மதவாதத்தை பாஜ தூண்டி வருகிறது. இதன் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மதத்தால் மக்களை பிளவு படுத்தி பலன் அடையப் பார்க்கிறது.  இதுபோன்ற அரசியல் தீவிரவாத செயல்களை மேற்கு வங்க மக்கள் என்றுமே அனுமதிக்க மாட்டார்கள். இதுபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜ வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு பணம் கொடுக்க முயற்சிக்கிறது. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்..

Leave A Reply

Your email address will not be published.