ஷீலாவை எதிர்த்து திவாரி லவ்லிக்கு போட்டி கம்பீர்

0 7

டெல்லியில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. டெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வருகிற மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியுடன்  காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.  உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தது. இதன்படி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் வடகிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி, ஆம் ஆத்மியின் திலீப் பாண்டே அவரை அங்கு எதிர் கொள்கின்றனர். அது போல, கிரிக்கெட் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை டெல்லியில் பாஜ புதிதாக களமிறக்குகிறது. காங்கிரஸ்  தலைவர் லவ்லியை எதிர்த்து கிழக்கு டெல்லியில் அவர் போட்டியிடுகிறார்.புதுடெல்லியில் அஜய் மக்கான், சாந்தினி சவுக்கில் ஜே.பி.அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு டெல்லியில் அர்விந்தர் சிங் லவ்லி, வடமேற்கு டெல்லியில் ராஜேஷ் லிலோத்தியா, மேற்கு  டெல்லியில் மகாபால் மிஸ்ரா ஆகியோரையும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.