சபாஷ் நல்ல போட்டி… ஹூடாவை எதிர்த்து திக்விஜய்

0 6

அரியானாவின் சோனிபட் ெதாகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பூபேந்தர் சிங் ஹூடாவை எதிர்த்து ஜேஜேபி சார்பில் திக்விஜய் சவுதாலா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அரியானாவில் மக்களவை தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 3 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 7 இடங்களில் ஜனநாயக  ஜனதா கட்சியும் போட்டியிடுகின்றன.  ஞாயிறன்று ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இம்மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம்  கட்சியில் இருந்து அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் பேரன் துஷ்யந்த்  ஆகியோர் தனியாக பிரிந்து  ஜனநாயக ஜனதா என்ற  பெயரில் புதிய  கட்சியை தொடங்கியுள்ளனர். 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இக்கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஹிசாரில் துஷ்யந்த் சவுதாலா போட்டியிடுகிறார்.  இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 3 வேட்பாளர்களின் பட்டியலை ஜனநாயக ஜனதா  கட்சி நேற்று வெளியிட்டது. சோனிபட்டில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான பூபேந்தர்  சிங் ஹூடாவை எதிர்த்து ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் திக்விஜய் சவுதாலா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருஷேத்ராவில் ஜெய் பகவான் சர்மா மற்றும் குர்கானின் மெக்மூத் கான் ஆகியோரும்  போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.