“இடைத்தேர்தலில் ஜெயிச்சே ஆகணும்!” – முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் களமிறக்கிய எடப்பாடி!

0 8

மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரைத் தேர்தலுக்காக களமிறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க மற்றும் அ.ம.மு.க தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தேர்தல் பணிக்குழு அமைத்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. ஏற்கெனவே நடந்துமுடிந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும்தரப்புக்கு சாதகமாக வராது என்ற தகவல் மேலிடத்துக்குச் செல்ல, இனிவரும் நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று விட்டமின் ‘ப’-வை அ.தி.மு.க அதிகளவில் இறக்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர் இப்போதே புகார் வாசிக்கத்தொடங்கிவிட்டனர்.                                                                                                                 இந்நிலையில், கட்சியினர் எல்லாமட்டத்திலும் வேலை செய்கிறார்களா, வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரைக் களமிறக்கியுள்ளது எடப்பாடி அன் கோ. இவர் தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவர்களோடு நட்புபாராட்டியவர் என்பதால், தி.மு.க-வின் சாதக பாதகங்களை நன்கு தெரிந்துவைத்திருப்பதாலும் எடப்பாடி இவரை டிக் செய்திருக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி தரப்பு, அதனால் தேர்தலுக்குள் எதையும் செய்வார்கள் ஆளும் தரப்பினர் என்ற பேச்சு இப்போதே எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.