ஒருமுறைகூட ஓட்டு போடாத பாரதிய ஜனதா வேட்பாளர்!

0 7

பாரதிய ஜனதா சார்பாக மேற்கு வங்காளத்தின் பர்ஸாத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மிரினாள் கந்தி தேப்நாத்துக்கு வயது 70. அந்தத் தொகுதியில் கடைசிக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில்தான் ஒருமுறைகூட ஓட்டு போட்டதில்லை என்று அவர் ஒரு மேடையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 1974 தொடங்கி வெளிநாட்டில் மருத்துவராகப் பணியாற்றிய மிரினாள் கந்தி கடந்த பத்து வருடங்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.பத்து வருடங்களில் ஒரே ஒரு முறை வாக்குச்சாவடி பக்கம் எட்டிப்பார்த்தவர் அங்கு ஏற்கெனவே சில குண்டர்கள் கூட்டம் மொத்த ஓட்டுகளையும் தாங்களே பதிவு செய்து கபளீகரம் செய்துகொண்டிருந்ததால் ஓட்டு போடாமலேயே திரும்பியிருக்கிறார். இத்தனை வருடங்களாக ஓட்டு போடாமலேயே இருந்த ஒருவரை வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சி களமிறக்கி இருப்பது குறித்து சர்ச்சை எழுந்து வருகிறது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவரை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி வருகின்றன. இருந்தும் `ஒரே ஒருமுறை ஓட்டு போடச் சென்றபோதுதான் அவர்கள் என்னைத் துரத்திவிட்டார்களே, நான் என்ன செய்ய?’ என்று மிரினாள் கந்தி சமாளித்துவருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.