திமுக கூட்டணி வெற்றி பெறும்: அபூபக்கர்

0 4

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்று அபூபக்கர் எம்எல்ஏ கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அபூபக்கர், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதைதொடர்ந்து, அபூபக்கர் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கம் எடுபடவில்லை. மேலும், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக இருந்தாலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுக கூட்டணி வெற்றி பெறும். மேலும் 4 தொகுதி இடைத்தேர்தலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து பிரசாரம் செய்ய உள்ளோம். திமுகவின் பிரசார குழுவினருக்கு நன்றி தெரிவித்தோம். திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.