`நான் இறந்தாலும் இறப்பேனே தவிர மோடியின் பெற்றோரை விமர்சிக்க மாட்டேன்!’- பதிலடி கொடுத்த ராகுல்

0 5

“அவர் என் மீது வெறுப்பு செலுத்துகிறார் நான் அன்பை செலுத்தி அவரை வீழ்த்தப் பார்க்கிறேன் நான் இறந்தாலும் அவர் குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன்’ என்று ராகுல் உருக்கமாகப் பேசியுள்ளார்மக்களவைத்தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மே 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது தேர்தலையொட்டிய பிரசாரத்தில் பேசும் தேசிய கட்சியினர் மாறி மாறி தங்களை குற்றம்சாட்டி வருகின்றனர் மோடி பேசுகையில் `ராஜீவ்காந்தி ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தவர்” என்று சாடியிருந்தார் இது சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி `இதே அகந்தைதான் துரியோதனனுக்கும் இருந்தது” என்றார் இந்த நிலையில் ராகுல் காந்தி `நான் இறந்தாலும் இறப்பேனே தவிர மோடியின் பெற்றோரைத் திட்டமாட்டேன்’ என்று பேசியுள்ளார் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்சைன் என்ற பகுதியில் பேசிய ராகுல் காந்தி  `நான் யாரையும் வெறுப்பதில்லை ஆனால் மோடி வெறுப்பை உமிழ்கிறார்அவர் என் தந்தை ராஜீவ் காந்தி பாட்டி இந்திரா காந்தி தாத்தா நேரு உள்ளிட்டோரை அவமானப்படுத்துகிறார் ஆனால் நான் ஒருபோதும் மோடியின் தாய் மற்றும் தந்தை உள்ளிட்டோர் அடங்கிய குடும்பம் குறித்து பேசமாட்டேன் நான் இறந்தாலும் இறப்பேனே தவிர மோடியின் தாய் தந்தையை அவமானப்படுத்திப் பேசமாட்டேன் காரணம் நான் பிஜேபியோ ஆர்எஸ்எஸ்ஸைச் சார்ந்தவனோ அல்ல காங்கிரஸில் இருப்பவன் அவர் என்னை நோக்கி வெறுப்பை வீசினால் நான் பதிலுக்கு அன்பைத் தருவேன் நாங்கள் மோடியை அன்புடனும் அரவணைப்புடனும் வீழ்த்துவோம்மோடி விவசாயிகள் தற்கொலை வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பேசுவதில்லை மாறாக அவர் தன் இன்டர்வியூக்களில் மாங்காவை எப்படிச் சாப்பிட வேண்டும் அவர் அணியும் குர்தா குறித்தும்தான் பேசுகிறார் இந்தியாவில் புயல் மற்றும் மழையின்போது அனைத்து விமானங்கள் ராடாரிலிருந்து மறைந்துவிடுமா” என்று சரமாரியாக தாக்கிப் பேசினார் ராகுலின் இந்தக் கருத்து தொடர்பாக பேசிய மத்தியப்பிரதேச மாநில பாஜக தலைவர் விஜேஸ் லுனாவத் “மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை ராகுல் உணர்ந்திருக்கிறார் அதனால்தான் அவர் தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் பிரதமர் மோடியை சாடிக்கொண்டிருக்கிறார்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.