உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை: திமுக தலைவர் ஸ்டாலின்

0 9

திருப்பரங்குன்றம்: உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்று திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறியுள்ளார், திருப்பரங்குன்றத்தல் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  2 வது கட்டமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழை எளிய பெண்களுக்கு திருமண செலவுக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை கொண்டுவந்தவர் கலைஞர் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்கள் முதல் கட்ட பிரச்சாரம் இருந்ததது. 2 வது கட்டப் பிரச்சாரம் இன்று ஒரு நாள் நடைபெறுகிறது. இன்று காலை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள கோழிமேடு என்ற பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள மக்களுடன் உரையாடினார். திமுக ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய பல்வேறு நல திட்டங்களை குறித்து எடுத்து கூறினார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் அதிக அளவில் குடிநீர் பிரச்சனை மற்றும் அடிப்படை பிரச்சனையை பற்றி கூறினர். பின்னர் பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெவித்துள்ளார் மேலும் தொழிலாளர்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.