மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு,..அரசியல் தலைவர்களின் ஆதரவும்,..எதிர்ப்பும்

0 8

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் சிவக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்தி சில அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தும் பேசி வருகின்றனர். சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது பாஜக புகார் அளித்துள்ளது. இந்துக்கள் மனம் புண்படும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக காவல்நியைத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் குமார் புகார் மனு அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். அதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். மேலும் இந்த இடம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். ஏனெனில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். இது தற்போது பாஜ, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்பை சார்ந்தவர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. * தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ,  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  கி.வீரமணி  கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சில அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழிசை எதிர்ப்பு கண்டனம்:

கல்ஹாசன் முதலில் அவர் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கட்சி பதவியில் இருந்து இறங்கட்டும். இந்துக்கள் குறித்து பேசியதற்காக அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அவர் விஷ விதைகளை பரப்புகிறார். வேண்டும் என்றே வதந்தியை, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கமல் கட்சி தோழர்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள் இவ்வாறு கூறியுள்ளார்.நாக்கு இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து:நாக்கு இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கமலுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்தை சொன்னார். அதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் ஒரு கருத்தை சொன்னார். இத்துடன் அந்த பிரச்னை முடிந்து விட்டது. எனவே இதை மீண்டும் கிளறக்கூடாது. கமல்ஹாசனாக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி. நாக்கு இருப்பதால் எதையும் பேசிவிடக் கூடாது. எதையும் அளந்து பேச வேண்டும். யாரையும் பாதிக்காத வகையில் பேசவேண்டும். இது எல்லோருக்குமான பதில்.  கமலை மிரட்டி பணிய வைக்க முடியாது: பிரேமலதா விஜயகாந்த் இந்து, இஸ்லாம். கிறிஸ்தவம் போன்ற எந்த மதங்களாக இருந்தாலும் மத ரீதியான கருத்தை சொல்லும்போது மிகவும் கவனமாகவும் யார் மனதையும் புண்படுத்தாமலும் பேசவேண்டும். கமல்ஹாசன் பிறப்பால் ஒரு இந்து. இந்நிலையில் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அது மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அது மிகவும் தவறானதுதான். மதம் ஜாதி ரீதியான கருத்துக்களை பேசும்போது யோசித்து நிதானமாக பேசவேண்டும். தவறான வார்த்தைகளை யார் பேசினாலும் சரி. தவறுதான். மேலும் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பேசியதற்காக சில அமைப்புகள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுவது சரியான செயல் அல்ல.கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டு: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிமத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமைச்சர் பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறும் வகையில் பேசியுள்ளார். ஆதலால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. கமல்ஹாசன் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். கமல்ஹாசன் தனது பேச்சை திருத்திக் கொள்ளவே தாம் அவ்வாறு பேசியதாக ராஜேந்திரபாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதி அற்றவர்; இத்தாலியில்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.