திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பண விநியோகத்தில் அதிமுக-அமமுக போட்டி: செல்லூர் ராஜூ பேச்சால் பரபரப்பு

0 7

மதுரை, மே 16:  இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பணம் விநியோகம் செய்யும். ஆனால் டிடிவி அணியினரும் பணம் விநியோகம் செய்கின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ திருப்பரங்குன்றம் கோயில் சன்னதி முன்பாக நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நம்மிடம் இருந்து பிரிந்து உதிர்ந்த இலையான கட்சியை சேர்ந்தவர்கள் தொகுதியில் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து தெருவில் உலா வருகின்றனர். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பணம் கொடுக்கும். திருப்பரங்குன்றம் தொகுதியில், வித்தியாசமாக டிடிவி அணியினர் பணத்தை விநியோகம் செய்கின்றனர். நமக்கு பயந்து தற்போது அவர்களும் பணம் விநியோகிக்கின்றனர். அவர்கள் சர்வசாதாரணமாக தொகுதிக்குள் வலம் வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி உள்ளது’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.