2014-ம் ஆண்டு இதேநாளில் என்ன நடந்தது தெரியுமா? #LoksabhaElection

0 2

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிகிற கட்டத்தை எட்டியுள்ளது வருகிற 19-ம் தேதி கடைசிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்படுகிறது இன்னும் 7 நாள்களில் மோடியா ராகுலா கூட்டணி ஆட்சியா மம்தாவா என்பது தெரிந்து விடும் ஆனால் 2014- ம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது சிங்கிள் மெஜாரிட்டியாக 282 சீட்டுகளைப் பாரதிய ஜனதா கைப்பற்றியபோது அரசியல் விமர்சகர்கள் தங்களையே கிள்ளிப் பார்த்துக்கொண்டனர்428 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 66  சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சியால் வெறும் 44 சீட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது மக்களவையில் எதிர்க்கட்சியாகக்கூட முடியாமல்போனது பாரதிய ஜனதா கட்சிக்கு வெறும் 31 சதவிகித மக்கள்தான் வாக்களித்துள்ளனர் மீதி 69 சதவிகித இந்தியர்கள் வாக்களிக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின ஆனால் 1991-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியுமே மக்களவை தேர்தலில் 31 சதவிகித வாக்குகளைப் பெற்றதில்லை என்பதும் உண்மை 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி மோடி இந்திய பிரதமர் ஆனார் அப்போது பாரதிய ஜனதா வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் இருந்தன  1 பொருளாதார சரிவு காரணமாகத் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு மீது சலிப்பு ஏற்பட்டது மோடியின் குஜராத் மாதிரி முன்னேற்றம் தேவை என்று மக்கள் விரும்பினர் 39இந்தியாவைக் குஜராத்போல மாற்றுவேன்39 என்று மோடி பிரசாரம் மேற்கொண்டார் 2 இரண்டாவதாக ஊழல் 2ஜி காமன்வெல்த் போட்டி ஊழல் ஆதர்ஷ் ஊழல் நிலக்கரி ஊழல் முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் 3 2014-ம் ஆண்டு இந்தியாவில் 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 81 கோடி பேர் இருந்தனர் 39நான் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவேன்39 என்று பேசி மோடி அவர்களைக் கவர்ந்தார் இளைஞர்கள் பாரதிய ஜனதாவுக்காக ஓட்டளிக்கவில்லை மோடிக்காகவே பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளித்தனர்  4 தென்னகத்தைவிட வட இந்தியர்கள் இந்துத்துவா மீது அதிக நம்பிக்கை உடையவர்கள் மோடியை ஸ்ட்ராங்கான இந்து மதத் தலைவராகவே பார்த்தனர் அதற்கேற்ற வகையில் தர்கா ஒன்றுக்குச் சென்றபோது மோடி தன் தலையில் குல்லா அணிய மறுத்தார் இந்த வீடியோவை பாரதிய ஜனதா சமூக வலைதளங்களில் பரப்பி மோடி இஸ்லாமிய மக்களிடம் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்கிற இமேஜை உருவாக்கினர் அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய மக்களைச் சமாதானப்படுத்தவே முயல்வதாக மோடி பிரசாரத்தை மேற்கொண்டார் 5 ஐந்தாவதாக மோடி பிராண்ட் மோடிக்கு டெக்னாலஜி அறிவு அதிகம் இல்லையென்றாலும் கற்றுக்கொள்வார் மக்களைப் பேச்சில் கவருவதில் வித்தகர் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் திறனும் அதிகம் 2014-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து இரு ராணுவ வீரர்களின் தலைகளைத் துண்டித்தது இந்த விஷயத்தைக் கையில் எடுத்த மோடி மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று பேச்சுக்குப் பேச்சு குறை கூறினார் சுஷ்மா 39எங்கள் அரசு அமைந்தால் ஒரு இந்தியர் தலைக்கு 10 பாகிஸ்தான் தலை உருளும்39 என்றார் இதே மாதத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி சொன்ன வார்த்தைதான் அந்த 56 இன்ச் மார்பு 

Leave A Reply

Your email address will not be published.