`கோட்சே குறித்த பிரக்யாவின் கருத்து எங்கள் கட்சியின் கருத்தல்ல!’ – பா.ஜ.க கண்டனம்

0 3

நாதுராம் கோட்சே தீவிரவாதி அல்ல அவர் ஒரு தேசபக்தர் எனப் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து 39மக்கள் நீதி மய்யம் கட்சி39யின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார் அதில் `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே39 என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது இவரின் பேச்சுக்கு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் அதேவேளையில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர் குறிப்பாகப் பாஜக அதிமுக சார்பில் இருந்து அதிக எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த விவகாரத்தில் கமலை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் நமது அம்மா இதழிலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது ஒருகட்டத்தில் மோடியே இந்த விவகாரத்தில் கமலை சாடும் விதமாகப் பதிலளித்திருந்தார் போதாக்குறைக்குக் கமல் மீது இரண்டு வழக்குகளும் பதியப்பட்டனஇதற்கிடையே நேற்றைய திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் இதற்கு கமல் விளக்கம் அளித்தார் அதில் “நான் கூறியது சரித்திர உண்மை உண்மைகள் கசக்கும் தீவிரவாதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார் இந்நிலையில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கிடம் கமலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்குப் பதிலளித்த அவர் “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார் இருக்கிறார் இன்னும் இருப்பார் அவரைத் தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும் கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் எனக் கூறியுள்ளார் பிரக்யாவின் இந்த கருத்து தங்கள் கட்சியின் கருத்து அல்ல பாஜக தெரிவித்துள்ளது இதுகுறித்து பேசியுள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நரசிம்ஹ ராவ் “பாஜக இந்த கருத்துடன் ஒத்துப் போகாது இப்படி ஒரு கருத்தை வெளியிட்ட பிரக்யாவை நாங்கள் கண்டிக்கிறோம் இதுகுறித்து கட்சிக்கு விளக்கம் கேட்கப்படும் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.