ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் : முத்தரசன் எச்சரிக்கை

0 6

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும் என்று முத்தரசன் பேட்டியளித்துள்ளார். டெல்டாவில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தது விவசாயத்திற்கு ஆபத்து என்று அவர் கூறியுள்ளார். விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் கூறியுள்ளார். காவிரி படுகை மற்றும் புதுவையில் 774 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது விவசாயிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மத்திய அரசின் இந்த செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வங்கால விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம், திருவள்ளூர் உள்பட கடலோரப்பகுதியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.