பிரதமர் மோடி 1988-ம் ஆண்டு டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியது உண்மையா?

0 9

பிரதமர் மோடி சமீபத்தில் ஆங்கிலச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 1988-ம் ஆண்டு டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியதாக கூறியிருந்தார் டிஜிட்டல் கேமரா வர்த்தக ரீதியாக இந்தியாவில் 1990-ம் ஆண்டுகள்தான் அறிமுகப்படுத்தப்பட்டதுசெய்திச் சேனலில் பேசிய மோடி “குஜராத் மாநிலத்தில் விரம்கம் என்ற இடத்தில் 1988-ம் ஆண்டு நடந்த பேரணியில் அத்வானிஜி பங்கேற்றார் அத்வானிஜியின் புகைப்படத்தை டிஜிட்டல் கேமராவில் எடுத்து இமெயிலில் டெல்லியில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தேன் அடுத்த நாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்தப் புகைப்படம் வண்ணத்தில் வெளியாகியிருந்தது அத்வானிஜி வண்ணத்தில் வெளியான தன் புகைப்படத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனார்3939  என்று கூறியிருந்தார் உண்மை என்ன உலகில் 1978-ம் ஆண்டு டிஜிட்டல் கேமரா அறிமுகமானதாகவும் பேடன்ட் உரிமை இதே ஆண்டில் பெறப்பட்டதாக 39நியூயார்க் டைம்ஸ்39 சொல்கிறது அப்போது இவை எலெக்ட்ரானிக் ஸ்டில் கேமரா என்று அழைக்கப்பட்டன டெக்னாலஜி வெப்சைட்  39Mashable39 1980-களில் இந்தியாவில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தன என்றும் ஆனால் பல ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதற்காகச் செலவு செய்ய வேண்டியது இருந்தது அதனால் பலருக்கு இந்த ரக கேமராக்கள் இருப்பது தெரியவில்லை கேனான் ஆர்சி 701 நிகான் க்யூ சி 1000சி போன்ற மாடல்கள் இருந்தன என்று கூறுகிறது ஆனால் இவை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படவில்லை பிரதமர் எந்த ரக கேமரா வைத்திருந்தார் என்று சர்ச்சைகளுக்குப் பிறகும் விளக்கம் அளிக்கவில்லை 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் டிஜிட்டல் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது அதற்கு முன்னதாக மோடி டிஜிட்டல் கேமரா வைத்திருந்தார் என்றால் வெளிநாட்டில் இருந்து யாராவது வாங்கி அவருக்குப் பரிசாக வழங்கியிருக்க வேண்டும் என்று டெக் ஏஆர்சி நிறுவனத்தின் தலைவர் பைசல் காவ்ஸோ கூறுகிறார் 1986-ம் ஆண்டே இன்டர்நெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கல்வி ஆய்வு திட்டங்களுக்காக (ERNET) மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது வர்த்தக ரீதியாக 1995-ம் ஆண்டு இன்டர்நெட் இந்தியாவில் அறிமுகமானது3939 என்றும் பைசல் கவ்ஸோ தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.