மகாத்மா காந்தியை அவமதித்த பிரக்யாவை மன்னிக்க மாட்டேன் : மவுனம் கலைத்தார் மோடி

0 3

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது ஜாமீனில் உள்ளார். போபால் மக்களவை தொகுதியின் பாஜ வேட்பாளராக இவர் போட்டியிடுகிறார். குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழுந்தன. எனினும் இதனை பாஜ கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கோட்சே குறித்த கருத்தை கூறி மிகப்பெரிய சர்ச்சையை பிரக்யா உருவாக்கி விட்டார். சமீபத்தில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே’ என்று கூறினார்.  இது தொடர்பாக கருத்து கூறிய  பிரக்யா, ‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கூறினார். அவரது இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக பாஜ.விற்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பிரக்யா தனது கருத்தை திரும்ப ெபற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “மகாத்மா காந்தியை மதிக்கிறேன். அவர் நாட்டுக்காக செய்த சேவையை மறக்க முடியாது,” என்றார்.  ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் மவுனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோட்சேவை தேசப்பக்தர் என்று கூறிய போதும், கொல்கத்தா கலவரத்தில் வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்ட பிறகும் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். என்னால் இந்த நாட்டுக்காக பிரார்த்தனை தான் செய்ய முடியும்’ என்று கூறினார்.இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்த பிரதமர் மோடி, பிரக்யா சிங் விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்தார். பேட்டியில் அவர் கூறுகையில், “பிரக்யா சிங் தாகூர் மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்து விட்டார். மகாத்மா காந்தி அல்லது நாதுராம் கோட்சே குறித்த அவரது கருத்துக்கள் மிக மிக மோசமானவை. இந்த சமூகத்துக்கு மிகவும் தவறானவை. அவர் மன்னிப்பு கோரினார். ஆனாலும், ஒருபோதும் அவரை என்னால் முழுமையாக மன்னிக்க முடியாது,” என்றார்.கடவுளை நேசிப்பவர் அல்ல கோட்சேவை நேசிப்பவர்கள்கோட்சே குறித்த பாஜ தலைவர்களின் கருத்தை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜ, ஆர்எஸ்எஸ் நபர்கள் கடவுளை நேசிப்பவர்கள் அல்ல. கோட்சேவை நேசிப்பவர்கள்’ என்று கூறியுள்ளார். பாஜ தலைவர்கள் மீது நடவடிக்கைபாஜ தலைவர் அமித் ஷா நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘பிரக்யா சிங் தாகூர் உட்பட கட்சியின் தலைவர்கள் அனந்த் குமார் ஹெக்டே, நலின் கடீல் உள்ளிட்டோர் நாதுராம் கோட்சே பற்றி கூறிய சர்ச்சைகுரிய கருத்துகளை பாஜ தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இது, அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள். அவர்கள் தங்கள் கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். எனினும், இந்த கருத்துக்கள் பொது வாழ்க்கைக்கும், பாஜ.வின் சித்தாந்தத்துக்கும் எதிரானது. இது தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும். பின்னர், அடுத்த கட்ட நடவடிக்ைக குறித்து முடிவு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.அறிக்கை சமர்ப்பிப்புகோட்சே பற்றி பிரக்யா கூறிய கருத்து தொடர்பாக மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி காந்தாராவிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு இருந்தது. அதன்படி, தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அவர் நேற்று சமர்ப்பித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘கோட்சே குறித்து பிரக்யா பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளோம். அதில், என்ன விவரம் உள்ளது என்று தெரிவிக்க முடியாது. அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்,’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.