மன சமநிலையை இழந்துட்டார் தீதி : மம்தா மீது ரூபானி தாக்கு

0 3

மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை பாஜ தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பாஜ – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. அப்போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. இதை செய்தது யார் என்பது தொடர்பாக இரு கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் இம்மாநில முதல்வர் விஜய் ரூபானி நேற்று அளித்த பேட்டியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது பேட்டியில், ‘‘மேற்கு வங்க முதல்வர் தீதி (மம்தா) மன சமநிைலயை முற்றிலும் இழந்து விட்டவர் போல் காணப்படுகிறார். அவர் ஜனநாயகத்தை களங்கப்படுத்துகிறார். இந்திய மக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தேர்தலில் மம்தாவுக்கு மேற்கு வங்க மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்,’’ என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.