அதிமுகவினர் விதிமீறலில் ஈடுபடுவது சர்வசாதாரணம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

0 6

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதுரையிலிருந்து நேற்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் கமல்ஹாசன் பிரச்னையில் காந்தியையும், கோட்சேயையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் என்று மன்னார்குடி ஜீயர் சொல்லியிருக்கிறார். அதை நான் படித்ததும், ‘என் கண்ணை நானே பிடுங்கி கொள்ளலாம்’ என்று தோன்றியது. இதுபோன்ற வேதனையான ஒப்பீடுகள் சரியானதல்ல. கமல் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கலாம். அது கருத்து சுதந்திரம். அதற்காக வன்முறையில் ஈடுபடக்கூடாது. அதை, காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. டெல்லியில் 23ம் தேதி நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு கமல்ஹாசனை சோனியா காந்தி ஏன் அழைக்கவில்லை என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற போகிற கட்சிகளை மட்டுமே அழைத்துள்ளது. அதனால்தான், கமலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தேனியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் பெயர், கோயில் கல்வெட்டில் எம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை. அதிமுகவில் விதிமீறல் சர்வ சாதாரணம். அந்த நிலையில்தான் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இது அதிமுகவுக்கு வாடிக்கைத்தான். மத்திய அரசு நடத்துகிற தேர்வு முறைகள், மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொது நிறுவனங்கள், ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட 10500 பணியிடங்களுக்கு மத்திய அரசு ேதர்வு நடத்தியது. அதில் தமிழர்களுக்கு 600 இடம் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. மிக கொடுமையான இலக்கை நோக்கி பாஜ அரசு செல்கிறது என்பதற்கு இந்த தேர்வு முறையே உதாரணம். இதே நிலை தொடர்ந்தால், இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும்.தாய்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற முறையை கொண்டு வர வேண்டும். ஐஐடியில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதும் நிலை உள்ளது. இதனால் மற்ற மொழி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.