“கோட்சே தேசபக்தர் என்றால்… காந்தி தீவிரவாதியா?” பி.ஜே.பி கருத்துக்கு வலுக்கிறது எதிர்வினை!

0 7

பற்றி எரிவதை அணைப்பதற்காகத்தான் அமைதி காக்கிறார் என்று அவருடைய மெளனத்துக்கு விளக்கம் சொன்னார்கள் ஆனால் சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் வந்த `பிக் பாஸ்’ தன்னுடைய வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் கூறி அந்தத் தீயில் புதிய வேள்வியையும் தொடங்கிவைத்துவிட்டார் காந்தியின் கொள்ளுப்பேரன் கமலைப் பற்றிப் பேசுகிறோம் `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து அவர் நாதுராம் கோட்சே’ என்கிற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி `நாக்கை அறுக்க வேண்டும்’ `கமலை ரோட்டில் நடமாட விடமாட்டோம்’ என்கிற பிரச்னை தீவிரமடைந்தது காவல்நிலையம் நீதிமன்றம் என்கிற அளவுக்குப் போனது இந்த நிலையில் ‘ஆழ்வார்களாலோ நாயன்மார்களாலோ இந்து என்கிற  மதக்குறிப்பு சொல்லப்படவில்லை’ என்கிற ட்வீட்டின் மூலமாக இந்தப் பிரச்னையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார் கமல்ஹாசன்கமல் பேசியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் கருத்து மோதல்கள் களை கட்டியிருக்கின்றன இப்போதாவது கமல் யாரை எதிர்க்கிறார் என்று தெரிகிறதா என்று கேட்கிறார்கள் நம்மவரின் நற்பணியாளர்கள் பிஜேபியின் ‘பி டீம்’ இல்லை என்று காண்பிப்பதற்காக கமல் மற்றும் பிஜேபியால் இணைந்து நடத்தப்படும் நாடகம் என்கிறார்கள் உடன் பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்கமலுக்கு அல்ல கமல் நெருக்கமாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்ன சொல்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்“தீவிரவாதத்துக்குப் பலியானவர் காந்தி என்று கமல்ஹாசன் முதலில் சொன்னார் அது சரியானது காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஓர் இந்து என்றும் கமல் சொன்னார் அதுவும் உண்மைதான் ஆனால் அவர் அதை அங்கு சொல்லியிருக்க வேண்டியதில்லை காரணம் அப்படி அவர் சொன்னால் மதத்தின் காரணமாகத்தான் அதைச் சொன்னார் என்கிற அர்த்தம் வந்துவிடுகிறது அதைத்தான் சிலர் பிடித்துக்கொள்கிறார்கள்இந்துத்துவவாதிகளால் காந்தி கொலைசெய்யப்பட்டார் என்று கமல் சொல்லியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து பிறகு அதன்பின் அவர் அளித்த விளக்கம்தான் பெரிய கூத்து `தீவிரவாதி என்றுதான் நான் சொன்னேன் பயங்கரவாதி என்று சொல்லவில்லை… கொலைகாரன் என்று சொல்லவில்லை’ என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்`தீவிரவாதம்’ என்றால் ஒரு வாதத்தைத் தீவிரமாக வைப்பது பயங்கரவாதம் என்பது ஒரு மோசமான கொள்கைக்காக கொலையையும் செய்வது… திட்டமிட்டு ஆயுதமற்ற நிரபராதியைக் கொலை செய்வது… சம்பந்தமில்லாத மக்களைக் கொலை செய்வது அந்த வகையில் பார்த்தால் ஒரு மோசமான கொள்கைக்காக திட்டமிட்டு காந்தி படுகொலை செய்யப்பட்டார் இந்தப் பார்வையுடன் கமல் பேசியிருந்தால் அதை ஏற்புடையதாக இருந்திருக்கும் ஆனால் கமலின் பேச்சும் விளக்கமும் ஒரே குழப்பமாகவும் அரைகுறையாகவும் இருக்கிறது அரைகுறை அறிவு ஆபத்தானது ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் கமல் இதையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும்`இந்து’ என்பது மதம் `இந்துத்வா’ என்பது அரசியல் நோக்கம்கொண்ட மதவெறி இந்துவின் பிரதிநிதி காந்தி இந்துத்வாவின் பிரதிநிதி கோட்சே ஓர் இந்துவை ஓர் இந்துத்துவா கொன்றுவிட்டது இந்த வித்தியாசம் கமலுக்குத் தெரியவில்லைஇந்து என்பது வேறு இந்துத்வா என்பது வேறு `இந்துத்வா’ என்கிற புத்தகத்தை சாவர்கர் எழுதினார் அந்தப் புத்தகம்தான் நாதுராம் கோட்சேவையும் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரையும் `இன்ஸ்பயர்’ பண்ணியது காந்தியின் கொலைக்கும் அதுதான் காரணமாக இருந்துள்ளது அதுதான் உண்மைநேற்று கமல் போட்ட ட்வீட்டில் `இந்து’ குறித்துச் சொல்லியிருக்கும் விஷயம் யதார்த்தமானது `ஆழ்வார்களாலோ நாயன்மார்களாலோ இந்து என்கிற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை’ என்று கமல் கூறியிருப்பது உண்மைதான்நம்முடைய வேதங்களில் இதிகாசங்களில் புராணங்களில் இந்து என்பது கிடையாது வெளியிலிருந்து வந்த முஸ்லிம்களால் சிந்து என்பது இந்து என மாறியது ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கணக்கெடுப்பின்போது குழப்பம் வந்ததால் இந்துவை அதிகாரபூர்வமானதாக மாற்றிவிட்டனர் அது இப்போது ஆர்எஸ்எஸ் பிஜேபி போன்ற அமைப்புகளுக்கு மிகவும் வசதியாகிவிட்டது  இந்துவுக்குள் பல சமயங்கள் சேர்ந்துவிட்டன உதாரணமாக பிராமணர்கள் உருவாக்கியது பிராமண மதம் அதற்குள் சைவ மதம் வைணவ மதம் என இரு பிரிவுகள் வைணவத்துக்குள் தென்கலை வடகலை என இரு பிரிவுகள் சூத்திரர்களுக்கு ஏகப்பட்ட குடும்ப தெய்வங்கள் பஞ்சமர்களுக்கென்று ஏகப்பட்ட குடும்ப தெய்வங்கள் இவை எல்லாவற்றையும் சேர்த்து இந்து என்று ஆக்கிவிட்டார்கள் இப்போது இந்து என்கிற அந்த வார்த்தையை வைத்து இந்து மதத்துக்குள் ஒரு குழுவினர் ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறார்கள் இப்படியான ஆழமான பார்வையிலிருந்து அல்லாமல் மேலோட்டமாக கமல் பேசுகிறார்இந்த இடத்தில் ஜீயர் பேசியிருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் ‘தேசப்பக்தியில்தான் காந்தியை கோட்சே கொன்றார்’ என்று ஜீயர் சொல்கிறார் கோட்சே ஒரு தேசபக்தன் என்று நீங்கள் சொன்னால் காந்தி ஒரு தீவிரவாதியா   “தீவிரவாதச் செயலுடன் இந்து மதத்தைச் சேர்க்கக் கூடாது3939 என்று பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பிஜேபி-யினர் சொல்கிறார்கள் அப்படியென்றால் பிறப்பால் இஸ்லாமியர் ஒருவர் ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்தால் அப்போது இவர்கள் என்ன சொல்கிறார்கள் கமல் பேச்சுக்குப் பதில் சொல்லும் தமிழிசை `இலங்கையில் நடந்தது இஸ்லாமிய பயங்கரவாதம் அது பற்றி கமல் ஏன் பேசவில்லை’ என்று கேட்கிறார் ஆனால் இங்கே இந்துவை அதில் சேர்க்காதீர்கள் என்று சொல்கிறார் அது என்ன நியாயம்ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் வெறியூட்டப்பட்ட கோட்சே காந்தியைக் கொலை செய்கிறார் இலங்கையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ் அப்படியென்றால் எந்த அமைப்பு செய்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே ஏன் மதத்தைக் கொண்டுவருகிறீர்கள் எந்த ஒரு மதமும் யாரையும் கொலை செய்யச் சொல்லவில்லை… பயங்கரவாதத்தில் ஈடுபடச் சொல்லவில்லை அப்படியிருக்கும்போது அந்த மதத்தைச் சார்ந்த எல்லோரும் கொலைகாரர்கள் என்று முத்திரை குத்துவது என்ன நியாயம்`முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கிறது ஆனால் இந்து பயங்கரவாதம் இல்லை’… ‘இல்லாதது இந்து பயங்கரவாதம் இருப்பது இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்றெல்லாம் பிஜேபி-யைச் சேர்ந்த நாராயணன் போன்றவர்கள் சொல்கிறார்கள் இது என்ன நியாயம் `பயங்கரவாதம் இருக்கிறது’ என்பதுடன் நிறுத்துங்கள் செய்தது யார் என்று சொல்லுங்கள் அவர் சார்ந்த அமைப்பைச் சொல்லுங்கள் ஏன் மதத்தைக் கொண்டுவருகிறீர்கள் இங்கு மதம் பிரச்னை அல்ல கோட்சே குழுவினர் இந்து மதத்தால் தூண்டப்பட்டு அதைச் செய்யவில்லைஇவர்களின் வாதத்தில் நியாயமில்லை அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது இவர்கள் இந்து பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது அதுதான் சரி” என்றார் அருணன்இந்த விவகாரம் குறித்து பிஜேபி-யின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணனிடம் பேசினோம்“கமல் ஆரம்பித்துவைத்த இந்த சர்ச்சையில் இந்துத்துவா ஆர்எஸ்எஸ் என்றெல்லாம் கொண்டுவருவது தவறு காந்தியடிகளை கோட்சே கொலை செய்தபோது அவர் இந்து மகாசபா என்கிற அமைப்பில் இருந்தார் அந்த அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது ஆனால் ஆர்எஸ்எஸ்ஸில் முன்பு இருந்ததாக கோட்சே சொல்லியிருக்கிறார் அப்படியென்றால் நாதுராம் கோட்சே காங்கிரஸிலும் இருந்திருக்கிறார்இந்து மகாசபாவின் தலைவராக அன்று இருந்தது நிர்மல் சந்திர சாட்டர்ஜி காந்தி கொலை செய்யப்பட்ட ஆறேழு மாதங்களில் மேற்குவங்கத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் அன்றைக்கு பிஜேபி-யோ ஆர்எஸ்எஸ்ஸோ ஆட்சியில் இல்லை மீண்டும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவர் இந்து மகாசபாவின் தலைவரானார் இப்படியான பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன எதற்காக காந்தியைச் சுட்டுக்கொன்றேன் என்று கோட்சே சொல்லியிருக்கிறார் அது ஒரு தனிமனிதன் செய்த படுகொலை அந்தக் குற்றத்துக்காக அவர் தூக்கிலிடப்பட்டார்இந்துத்வா என்ற சித்தாந்தத்தில் ஊறிப்போய் அதிலிருந்துதான் இந்தக் கொலைச் செயலில் கோட்சே ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டுவது தவறு நான் ஒரு எளிமையான கேள்வியைக் கேட்கிறேன் எம்ஆர்ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார் திக-வைச் சேர்ந்தவர் எம்ஆர்ராதா அப்படியென்றால் எம்ஜிஆரைச் சுட்டது திக என்று சொல்ல முடியுமா1947-க்கு முன்பாக அனைவருமே காங்கிரஸ்தான் காங்கிரஸ் அப்போது கட்சி அல்ல அது ஓர் இயக்கம் கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லோரும் அதில் இருந்தார்கள் ஆர்எஸ்எஸ்ஸை உருவாக்கிய ஹெட்கேவர்கூட காங்கிரஸ்காரர்தான் காங்கிரஸ் என்கிற இயக்கம் பிற்காலத்தில் கட்சியாக உருவானது சுதந்திர இந்தியாவில் பல்வேறு கொள்கைகளை உடையவர்கள் சமூகரீதியாக அரசியல்ரீதியாக பல்வேறு கட்சிகளை உருவாக்குகிறார்கள் எனவே அவர் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் இவர் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவா் என்றெல்லாம் சொல்ல முடியாது இன்றைக்கு பிஜேபி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவைகாந்தி படுகொலை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆனால் அதை ஓர் இந்து தீவிரவாதி செய்தார் என்று சொல்வது தவறானது ஏனென்றால் இந்து என்பது ஒரு மதமே அல்ல அது பிரிட்டிஷ்காரன் கொண்டுவந்ததுஇந்து தீவிரவாதம் என்கிற ஒன்று இல்லவே இல்லை ஆனால் உலகம் முழுக்க இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது அதே நேரத்தில் `இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்’ என்று சொன்னால் அதை நான் எதிர்ப்பேன் ஒரு குழுவாக ஓர் அமைப்பாகச் செயல்பட்டு மதத்தின் அடிப்படையில் செய்வது மத பயங்கரவாதம் அது இஸ்லாமிய பயங்கரவாதம் அதற்கு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு தொடங்கி இலங்கைக் குண்டுவெடிப்பு வரை பல உதாரணங்களைச் சொல்ல முடியும்காந்தியைக் கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று பிஜேபி-யின் நாடாளுமன்ற வேட்பாளர் பிரக்யாசிங் தாக்கூர் கூறலாமா என்று கேட்கிறீர்கள் நாராயணன் ஒரு தவறு செய்தால் அதற்குக் கட்சி பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை ஆனால் கட்சி தவறு செய்தால் நாராயணன் பொறுப்பேற்க வேண்டும் நான் தவறு செய்தால் கட்சி விளக்கம் கேட்கும் அப்படி பிரக்யாசிங் தாக்கூரிடம் கட்சி விளக்கம் கேட்டுள்ளது இன்னும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால் பெரம்பலூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த ராஜகுமார் திமுக-வைச் சேர்ந்தவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போய்விட்டார் அவர் செய்த குற்றத்துக்கு திமுக காரணம் என்று சொல்ல முடியுமாகோட்சே தவறாகச் சிந்தித்திருக்கிறார் அவர் செய்தது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம் ஆனால் பயங்கரவாதம் என்று சொல்லி மத அடையாளத்துடன் அதைக் கொண்டுவருவது மிகப்பெரிய தவறு இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் முயற்சிஅன்றைக்கு `இந்து’ என்று வார்த்தையைப் பயன்படுத்திய கமல் இன்றைக்கு `இந்து’ என்பது ஆழ்வார்களாலோ நாயன்மார்களாலோ சொல்லப்படாத வார்த்தை என்று விளக்கம் தருகிறார் அப்படியென்றால் இவர் சொல்வதில் எது உண்மை கமலுக்கு சரித்திரமும் தெரியவில்லை இந்தியா பற்றியும் புரிதலில்லை இதையெல்லாம் அவர் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பத்து நாள்களுக்கு அவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய புத்தகங்களை நாங்கள் அவருக்குக் கொடுக்கிறோம் அவற்றை நிதானமாகச் சிறையில் இருந்தவாறு படித்து தெளிந்துகொண்டு பிறகு வந்து அவர் பேசட்டும்” என்றார் நாராயணன்இப்படி இரு தரப்புமே கமலைப் பற்றி கடுமையான கருத்துகளைச் சொல்கிறார்கள் அடுத்து கமல் என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது அரசியல்வாதியாக கமல் வளர்ந்துகொண்டிருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.