`இம்முறை முத்தலாக் கன்ஃபார்ம்’ – ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை

0 6

ஜூன் 17-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசுமுனைப்புக்காட்டி வருகிறது இஸ்லாமியர்களின் திருமண உறவில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் தலாக் கூறி விவாகரத்துப்பெற்றுக்கொள்ளலாம் என்பது காலங்கலாமாக அவர்கள் பின்பற்றி வருகின்றனர் இம்முறை பெண்களுக்கு எதிரானது என்று கூறி இதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியது மத்திய பாஜக அரசு ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லைஎனினும் முத்தலாக் தடைச்சட்டத்தை அமல்படுத்தியாகவேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது இந்நிலையில் விரைவில் கூட இருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூடத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் `இம்முறை நிச்சயம் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்துள்ளார்கடந்த முறை மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது இம்முறை மசோதா நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தமிழக எம்பிக்கள் முத்தலாக் மசோதா வில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது விரைவில் தெரியவரும் 

Leave A Reply

Your email address will not be published.