பெப்ப பெப்பேன்னா எப்படி ட்ரூடோ… உங்கள நம்பறோம் ஏதாவது சொல்லுங்க!- அதிரவைத்த எம்.பி

0 6

மீம் கிரியேட்டர்களுக்கு அரசியல்வாதிகளைக் கலாய்க்க வேண்டும் என்றால் வடிவேல் கவுண்டமணி டெம்பிளேட்களை வைத்துக் கலாய்த்து தள்ளுவார்கள் அந்த மீம் கிரியேட்டர்களுக்கும் விருப்பமான ஓர் அரசியல்வாதி இருக்கிறார் அவர்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஜஸ்டின் ட்ரூட்டோ இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா ட்ரூடோவுக்கு இவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார் என மீம்ஸ்கள் பறக்கும் அந்த ட்ரூடோவையே கலாய்த்துத் தள்ளியுள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் எம்பிகனடாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை 2021-ல் அமல்படுத்தப்படும் என அந்நாடு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை அறிவித்தார் சுற்றுச்சூழல் மாசைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய யூனியனில் எடுக்கப்பட்டுள்ள நடைமுறையை உதாரணமாகக் கொண்டு நாமும் அதைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் பல நாடுகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் அதில் நாமும் ஒருவராக இருக்கப்போகிறோம் இது மிகப்பெரிய நடவடிக்கைதான் ஆனால் இதை 2021-ல் தான் நடைமுறைப்படுத்தவுள்ளோம் தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஸ்டாராக்களை தடை செய்யவுள்ளதாகக் கூறினார்அப்போது செய்தியாளர் ஒருவர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் `நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பிளாஸ்டிக் மாற்றாக எதைப் பயன்படுத்த உள்ளீர்கள் எனக் கேட்டார் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ட்ரூடோ சற்று தடுமாறினார் “நாங்கள் தற்போது தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக அதற்கு மாற்றாக தண்ணீரிலிருந்து நாங்கள் இப்போது பாட்டில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மன்னித்துவிடுங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து பேப்பரை உபயோகப்படுத்துகிறோம்” என்றார்நம்ம அரசியல்வாதிகளைப் போலதான் அங்கேயும் எப்படா கேப் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் காத்திருப்பார்கள் ட்ரூட்வோவின் இந்த வார்த்தை தடுமாற்றத்தை கன்சர்வேடிவ் ஃபெடரல் கட்சியைச் சேர்ந்த மிச்செல் ரெம்பல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தயவுசெய்து கூறுங்கள் இது ஒரு போலி வீடியோ அது உண்மையானதாக இருக்க முடியாது எனப் பதிவிட்டுள்ளார் அதுமட்டும் போதது என நாடாளுமன்றத்தில் பேசியவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரூட்டோ எவ்வாறு பேசினாரோ அதைச் செய்துக்காட்டினார்   

Leave A Reply

Your email address will not be published.