குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்! நினைவில் கொள்ளவேண்டியவை என்னென்ன?

0 6

தீண்டாமை குழந்தைத் தொழிலாளர் முறை கொத்தடிமை முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இவை ஒழிக்கப்பட்டுவிட்டன ஆனால் சமூகத்தில் அவற்றின் எச்சங்கள் இன்னமும் ஓரிரு இடங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன இந்த மூன்று பாதகச் செயல்களிலும் அதிக அளவில் பாதிக்கக்கூடியவர்களாகக் குழந்தைகள்தான் இருக்கிறார்கள் ஒருபுறம் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர்கள் சிறு வயதிலேயே தொழிலாளர்களாக உருவாக்கப்படுகிறார்கள் இந்த நிலையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜூன் 12-ம் தேதியை குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் கொண்டாடிவருகிறோம் என்றாலும் கடந்த காலங்களைவிட சமீபகாலமாக குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாவது கவலையளிக்கிறது அதுவும் கடந்த ஆண்டு நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் இந்த தினத்தில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்இதுகுறித்துப் பேசிய தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன் தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களும் கொத்தடிமை முறையிலான குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துவருகின்றனர் குழந்தைத் தொழிலாளர்களுடன் தொடர்புடையது கொத்தடிமை முறை எனலாம் கடந்த ஐந்தாண்டுகளாக கொத்தடிமை ஒழிப்பிற்கான உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறாத மாநிலம்  தமிழ்நாடு மட்டும்தான் உயர் மட்டக் குழு அமைக்கப்படும்பட்சத்தில்தான் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண நிதியை வழங்கமுடியும் தலைமைச் செயலாளரின் கீழ் செயல்படும் அமைப்புகளிலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள்வரை எதுவும் முறைப்படி இயங்குவதில்லைஇந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டமே மிகவும் ஓட்டையாக உள்ளது 3914 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள் அவர்களின் பாரம்பரியத் துறையில் வேலைசெய்வது சட்டப்படி குற்றமில்லை39 எனச் சொல்கிறது அதேபோல் 14 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் குழந்தைகளாகக் கருதாமல் அவர்களை வேலை செய்ய சட்டம் அனுமதியளிக்கிறது துணிக்கடை போன்ற நிறுவனங்களில் இன்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர் வேலை செய்துவருகின்றனர் 15 மணி நேரம் தொடர்ந்து நின்றால் அது பிற்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலனுக்காக மட்டும் 70 அரசு அலுவலர்கள் மக்களின்  வரிப்பணத்தின் மூலம் சம்பளம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் முறையாகச் செயல்படுவதில்லை அதேபோல் குழந்தைகளின் நலனை மேம்படுத்த தொழிலாளர்கள்துறையும் கல்வித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் அவ்வாறு இணைந்து செயல்படுவதில்லை ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு 18 வயதை நிர்ணயித்திருக்கிறது அரசு ஆனால் பரம்பரைத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எந்த மறுப்பும் தெரிவிப்பதில்லை கிராம அளவில் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கிற கமிட்டிகளை உருவாக்க வேண்டுமென 2001-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதன்படி மத்திய அரசு ஒருங்கிணைந்த  குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி அதற்கான நிதியையும் ஒதுக்கியது ஆனால் அந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்பதுதான் கேள்விக்குறி” என்றார்அமைப்பு சாரா தொழிலாளர்கள் மன்றத்தைச் சேர்ந்த கீதா குழந்தைத் தொழிலாளர் முறை என்பது நிறைய இடங்களில் கொத்தடிமை முறையாகத்தான் நடத்தப்படுகிறது தமிழகத்தில் இந்த முறையானது அதிகரித்துக்கொண்டேவருகிறது ஆனால் அரசு இதுகுறித்து மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பை நடத்தவேயில்லை முதலில் கணக்கெடுப்பை நடத்தினால்தான் எவ்வளவு பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய முடியும்  இடம்பெயரும் தொழிலாளர்கள் மத்தியில் குழந்தைகள் கொத்தடிமை அதிகமாக உள்ளது வடமாநிலங்களில் இருந்து கட்டட வேலைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் வாழ்வு இன்னும் மோசமாக உள்ளதுஇவற்றை ஒழிக்க மாவட்ட அளவிலான விஜிலன்ஸ் கமிட்டி அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒவ்வொரு  ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தீர்வுகளை நோக்கி நாம்  நகர முடியும் அதேபோல் இந்த குழந்தைத் தொழிலாளர் கொத்தடிமை முறையை வளர்ப்பதில் முக்கியமாகச் செயல்படுபவர்கள் இடைத்தரகர்கள்தான் அவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்றார்நரிக்குறவர் நலச் சங்கத்தை சேர்ந்த தேவதாஸ் கல்வியறிவும் அரசு அறிவிக்கும் திட்டங்களும் எங்கள் சமூகத்தைச் சென்று சேராததால் எங்களின் குழந்தைகள் சிறுவயதிலேயே தங்களின் பரம்பரைத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள் நிலையான குடியிருப்பு வறுமை போன்றவைதான் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் இத்தகைய நிலைக்குக் காரணமாக உள்ளது இதை உணர்ந்து எங்கள் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அரசு கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்குழந்தைகள் நலனில் சமூகம் சமத்துவத்தை நோக்கி நகர்தல் அவசியம்

Leave A Reply

Your email address will not be published.