`விரக்தியில் இருந்த ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு!’ – முற்றுப்புள்ளி வைத்த ஜெகன்

0 6

ஆந்திராவில் ஆளும்கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்தைக் காலிசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மது விலக்கு சனிக்கிழமைகளில் குழந்தைகள் பள்ளிகளுக்கு பேக் எடுத்துச்செல்ல தேவையில்லை உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் இப்படி அதிரடித் திட்டங்களால் மக்கள் மனத்தைக் கவர்கிறார் ஜெகன் `என்னால் எது முடியுமோ அந்த வாக்குறுதியை மட்டும்தான் கொடுப்பேன்’ என்று கூறி அசரவைக்கிறார் இந்திய அரசியல் வரலாற்றில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த 5 துணை முதல்வர்களை நியமித்து அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பியிருக்கிறார்பட்டியலினத்தவர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டவர் சிறுபான்மையினர் காபூ சமூகத்தினர் இந்த ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் ஜெகனின் ஐந்து துணை முதல்வர்கள் ஜெகன் தன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்துள்ளார் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதற்குப் பிறகு புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார் இதனிடையே நகரி எம்எல்ஏ-வாகத் தேர்வாகியிருக்கும் ரோஜாவுக்கு ஜெகனின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதுகாரணம் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தேர்தல் பிரசாரம் செய்தவர் ரோஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் `அமைச்சராகிறார் ரோஜா’ என்றெல்லாம் பேசப்பட்டு இறுதியில் அமைச்சரவை பெயர்ப் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை இதனால் ஓய்எஸ்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என கூறப்பட்டது ஆந்திர சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது இதில் பங்கேற்பதற்காக விஜயவாடாவுக்கு நேற்று வந்த ரோஜா “அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை சாதிகளின் அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார்இந்நிலையில் ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆந்திர அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்பில் ரோஜா நியமிக்கப்பட்டுள்ளது அமைச்சரவை கிடைக்கவில்லை என்ற பேச்சை குறைத்துள்ளது 

Leave A Reply

Your email address will not be published.