தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற உறுதி ஏற்க வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

0 8

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெற உறுதி ஏற்க வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நேற்று தலைமை கழக நிர்வாகிகள்,  மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நடைபெற்ற மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி. மக்களவை பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவிற்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.  தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.