தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு குமாரசாமிக்கு தமிழிசை பாராட்டு

0 12

சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடும் குமாரசாமி முடிவுக்கு தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சென்னையில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக முதல்வர் குமாரசாமி, திடீரென காவிரி தண்ணீர் திறந்துவிட  கூறியிருக்கிறார். காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுப்படி யாராக இருந்தாலும் நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டுத்தான் ஆகவேண்டும். குமாரசாமியின் மனமாற்றம் ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது. இதில், அரசியல்  உள்ளே புகுந்துவிடக்கூடாது. குமாரசாமி, தன்னுடைய பதவி பறிபோகப்போகிறது என்ற பயத்தில் தற்போது இவ்வாறு ேபசுகிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், பலமான அரசியல் செய்து கொண்டிருக்கும்போது, ரங்கநாதன் சுவாமி கோயிலில் சுவாமிதரிசனம்  செய்துவிட்டு வெளியே வந்தபோது, ‘ஆண்டவன் எங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறோம்’ என்று கூறிவிட்டு சென்றவருக்கு, இப்போது மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எது எப்படி என்றாலும்  தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்தால் நல்லதுதான்.தமிழகத்தில் அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட பாஜ முடிவு செய்துள்ளதாக அமமுக சார்பில் கூறப்படுவதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அமமுக,  கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து வரும் ஒரு கட்சி. இன்னும் கொஞ்சம் நாளில் அந்த கட்சி காணாமல் போய்விடும். அதனால் அதுபோன்ற கட்சிகள்  கூறும் கருத்துகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.