வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு

0 11

சென்னை: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில், தேர்தல் பணியாற்றிட “நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களும்”- தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு   சட்டமன்ற தொகுதிக்கு என  ஒரு “சட்டமன்ற  தொகுதி  தேர்தல்  பணிப்பொறுப்பாளர்களும்” தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். இந்த  அறிவிப்புக்கு ஏற்ப  மாவட்ட  செயலாளர்களும்- திமுகவினரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உடன் சென்று தேர்தல் பணியினை கட்டுப்பாடுடனும்-கண்ணியத்தோடும் ஆற்றிட வேண்டும்.நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களாக டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.வேலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிப் பொறுப்பாளர் க.பொன்முடி. தொகுதியில் பணியாற்றும் மாவட்டங்கள்: சென்னை மேற்கு-ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு- மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு-பி.கே.சேகர்பாபு, விழுப்புரம்   மத்திய- க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு- ஆ.அங்கையற்கண்ணி, தூத்துக்குடி வடக்கு-கீதா ஜீவன், நாகை வடக்கு-நிவேதா முருகன், நாகை தெற்கு- கௌதமன், புதுச்சேரி வடக்கு மாநிலம்- எஸ்.பி.சிவக்குமார்.அணைக்கட்டு  சட்டமன்றத்  தொகுதி: தேர்தல் பணிப் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி. தொகுதியில் பணியாற்றும் மாவட்டங்கள்: திண்டுக்கல் கிழக்கு- இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மேற்கு- அர.சக்கரபாணி, கடலூர் கிழக்கு-எம்.ஆர்.கே.பன்னீர்  செல்வம், அரியலூர்- எஸ்.எஸ்.சிவசங்கர், கரூர்-செந்தில்பாலாஜி, மதுரை தெற்கு-மு.மணிமாறன், திருநெல்வேலி கிழக்கு-இரா.ஆவுடையப்பன், கோவை வடக்கு- சி.ஆர்.இராமச்சந்திரன், திருவாரூர்-பூண்டி கே.கலைவாணன்.கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி: தேர்தல் பணிப் பொறுப்பாளர் கே.என்.நேரு. தொகுதியில் பணியாற்றும்  மாவட்டங்கள்: திருச்சி வடக்கு-தியாகராஜன், திருச்சி தெற்கு-கே.என்.நேரு, மதுரை வடக்கு-பி.மூர்த்தி, விருதுநகர் தெற்கு-  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு-தங்கம் தென்னரசு, புதுக்கோட்டை தெற்கு-எஸ்.இரகுபதி, புதுக்கோட்டை வடக்கு-செல்லபாண்டியன், பெரம்பலூர்-குன்னம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் தெற்கு-க.சுந்தர், சென்னை  வடக்கு-எஸ்.சுதர்சனம், திருவள்ளூர் வடக்கு-கி.வேணு, சிவகங்கை-கே.ஆர்.பெரியகருப்பன், கடலூர் மேற்கு-வெ.கணேசன்.குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி: தேர்தல் பணிப் பொறுப்பாளர்தா.மோ. அன்பரசன். தொகுதியில் பணியாற்றும் மாவட்டங்கள்: காஞ்சிபுரம் வடக்கு-தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் தெற்கு-சா.மு.நாசர், நீலகிரி- பா.மு.முபாரக், திருப்பூர் வடக்கு- க.செல்வராஜ், திருப்பூர் தெற்கு- இல.பத்மநாபன், கோவை தெற்கு-தென்றல் செல்வராஜ்,  கோவை மாநகர்-நா.கார்த்திக், தேனி-கம்பம் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு-அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மேற்கு-சிவ.பத்மநாதன், கன்னியாகுமரி கிழக்கு- எஸ்.சுரேஷ்ராஜன், திருநெல்வேலி மத்திய-அப்துல்  வகாப்.ஆம்பூர் சட்டமன்ற தொகுதி: தேர்தல் பணிப் பொறுப்பாளர் எ.வ.வேலு. தொகுதியில் பணியாற்றும் மாவட்டங்கள்:திருவண்ணாமலை வடக்கு-சிவானந்தம், திருவண்ணாமலை தெற்கு-எ.வ.வேலு, விழுப்புரம் வடக்கு-செஞ்சி மஸ்தான், கிருஷ்ணகிரி  கிழக்கு- டி.செங்குட்டுவன், நாமக்கல் கிழக்கு-செ.காந்திசெல்வன், நாமக்கல் மேற்கு-கே.எஸ்.மூர்த்தி, மதுரை மாநகர்-கோ.தளபதி, புதுச்சேரி தெற்கு மாநிலம்- ஆர்.சிவா, புதுச்சேரி-காரைக்கால் மாநிலம்-நாஜிம்.வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: தேர்தல் பணிப் பொறுப்பாளர் ஈரோடு  சு.முத்துசாமி. தொகுதியில் பணியாற்றும் மாவட்டங்கள்: ஈரோடு வடக்கு-நல்லசிவம், ஈரோடு தெற்கு-சு.முத்துசாமி, சேலம் கிழக்கு-வீரபாண்டி ஆ.இராஜா, சேலம்மேற்கு   – எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மத்திய-ஆர்.இராஜேந்திரன், தர்மபுரி-தடங்கம் பெ.சுப்ரமணி, கிருஷ்ணகிரி மேற்கு-தளி பிரகாஷ், ராமநாதபுரம்- முத்துராமலிங்கம், தஞ்சை வடக்கு-சு.கல்யாணசுந்தரம், தஞ்சை தெற்கு- துரை. சந்திரசேகரன்,  கன்னியாகுமரி மேற்கு-மனோ.தங்கராஜ்.

Leave A Reply

Your email address will not be published.