தெருவோரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கிடையாது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை: திமுக கேள்விக்கு அமைச்சர் பதில்

0 11

சட்டப்பேரவையில் நேற்று சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் துறைமுகம் சேகர்பாபு (திமுக) பேசியதாவது:சமூகநலத்துறை செயல்முறை திட்ட புத்தகத்தில் 2016-2017ம் ஆண்டு 1626 தையல் இயந்திரம் வாங்குவதற்காக ₹1 கோடியே 35 லட்சம் செலவில் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதே தையல் இயந்திரங்களை 2018-2019ம் ஆண்டு 2976 தையல்  இயந்திரம் வாங்குவதற்கும் அதே தொகையான ₹1 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரத்தின் எண்ணிக்கை கூடும்போது விலையும் கூடும். எனவே, விலையில் தவறு இருக்கிறதா? அல்லது  தரத்தில் குறை இருக்கிறதா? பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதற்காக 9.55 ஏக்கர் நிலப்பரப்பில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையமும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த மையம்  மூடிக்கிடக்கிறது.அமைச்சர் செங்கோட்டையன்: தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அந்த மையத்தில் பிச்சைக்காரர்களை  அடைத்து வைத்தால் சுவர் ஏறிக்குதித்து சென்றுவிடுகிறார்கள்.அமைச்சர் தங்கமணி: தையல் இயந்திரம் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகை. செலவு செய்யப்படும் தொகை பின்னர்தான் தெரியவரும்.அமைச்சர் சரோஜா: தெரு ஓரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கிடையாது. கையேந்துபவர்கள் தான் பிச்சைக்காரர்கள். அவர்களை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களும் விசாரணையில் ஒத்துக்கொண்டு,  மறுவாழ்வு மையத்துக்கு வர சம்மதித்தால் மட்டுமே இங்கு அழைத்து வர முடியும். அப்படி பார்த்தால், தமி ழகத்தில் பிச்சைக்காரர்களே இல்லை.சேகர்பாபு: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். 21 வகையான அங்க குறைபாடு உள்ளவர்களையும் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இணைக்க  வேண்டும். அப்படி இணைத்தால், தமிழகத்தில் 30 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் வருவார்கள். அவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கும்.அமைச்சர் சரோஜா: தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தற்போது, மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு  அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.சேகர்பாபு: மாற்றுத்திறனாளி நிதியம் ₹10 கோடி ஒதுக்கப்பட்டு, அது பயன்படுத்தப்படாமல் அப்படியே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் சரோஜா: அதற்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழு இந்த நிதியை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசனை நடத்தி வருகிறது.சேகர்பாபு: மாற்றுத்திறனாளிகள் நலவாரிய கூட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை.அமைச்சர் சரோஜா: வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய கூட்டம் கூட்டப்படும்.சேகர்பாபு: தேர்தல் நடத்தை விதிமுறை 2 ஆண்டுகளாகவா இருந்தது? மாற்றுத்திறனாளிகள் திட்ட கண்காணிப்பு குழு கூட்டமும் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை.பூங்கோதை (திமுக): பெண் அமைச்சரை பதில் சொல்லவிடுங்கள். மற்ற அமைச்சர்களே பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.முதல்வர் எடப்பாடி: அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்பு. அதனால் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.