நீட் தேர்வினால் இனி சாதாரண மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது: கே.எஸ். அழகிரி பேட்டி

0 4

சென்னை: நீட் தேர்வை அமல்படுத்துவதன் மூலம் அதிமுக அரசு சமுதாயத்தை பின்னோக்கி அழைத்து செல்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 262வது குரு பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் கொண்டு வந்ததால் நீட் தேர்வை செயல்படுத்தினோம் என்று சொல்லும் அதிமுக தற்போது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் காங்கிரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளுமா என கேள்வி எழுப்பினார். மேலும் இதனை தொடர்ந்து நீட் தேர்வினால் இனி சாதாரண மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது எனவும், கே.எஸ். அழகிரி தெரிவித்தார். மேலும் அவர் திட்டங்கள் எல்லாமே ஒரு பரிசோதனை எனவும், ஆனால் நீட் என்பது தமிழக மக்களுக்கு பொருத்தமில்லாமல் போகிறது என்பதனை தொடர்ந்து அது வேண்டாம் என்று தாங்கள் சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து தலைவர் ராகுல் காந்தி அவர்களும், தளபதி ஸ்டாலின் அவர்களும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்று அவர்கள் கூறிவிட்டதாகவும், மேலும் காங்கிரஸ் கொண்டு வந்ததாலேயே நீட் தேர்வினை நடைமுறை படுத்துவதாக சொல்பவர்கள் அவர்கள் வேண்டாம் என சொல்லும் பொது அதை நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.