அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் பகுதிகளில் துணை மின்நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

0 6

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரதின்போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதியில் மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றியமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றுவதற்காக ₹352 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது கள ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பணி தொடங்கப்படும். இ.கருணாநிதி: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மின் வினியோகத்திற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள், உயரழுத்த மின் கம்பிகள் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் காற்று வீசினால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து, மின்சாரம் தடைபடுகிறது. மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் “சார்ட் சர்க்கியூட்” ஏற்பட்டு வீடுகளில் உள்ள டிவி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவை பழுதாகிறது. எனவே, சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகத்தை புதைவடமாக மாற்ற வேண்டும்.அமைச்சர் தங்கமணி: பல்லாவரத்தில் புதைவடம் தடம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைவில் தொடங்க உள்ளோம். இ.கருணாநிதி: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். நானும் அதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால், இதற்கான கோப்பு வருவாய் துறை மூலமாக வழிகாட்டி மதிப்பு போட்டு அனுப்புவதற்கு தாமதம் ஆகிறது. மின் வாரிய அதிகாரிகள் கோப்புகளை அனுப்பி விடுகிறார்கள். ஆனால், வருவாய் துறை அந்த கோப்புகளை அனுப்புவதற்கான பணிகளை முடிக்கவில்லை. ஆகவே, அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அமைச்சர் தங்கமணி: விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கேட்டுள்ளோம். அந்த கோப்புகள் வந்தவுடன் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave A Reply

Your email address will not be published.