திட்ட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ் வழங்க சிஎம்டிஏவால் ஒற்றைசாளர இணையத்தை ஏற்படுத்த திட்டம்: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

0 7

சென்னை: சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:*  சென்னை புறநகர் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து  முனையம் ஆகியவற்றில் கண்காணிப்பை மேம்படுத்தி ரூ.2.25 கோடியில் முகம்  அடையாளம் காட்டும் கேமராக்கள் பொருத்தப்படும்.*  2000ம் ஆண்டு முதலான  மனைப்பிரிவு வரைபடங்கள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு  முந்தைய எல்லா வரைபடங்களும் மின்னணுமயமாக்கப்படும்.*  கோயம்பேடு அங்காடிகளில் பணியாற்றி வரும்  தினக்கூலி பணியாளர்களின் வசதிக்காக கழிப்பிட வசதியுடன் கூடிய தங்கும் விடுதி  ரூ.2 கோடியில் கட்டப்படும்.*  வேளச்சேரி துரித ரயில் நிலையத்தில் இரண்டு  மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்  ரூ.80 கோடியில் நிறுவப்படும்.*  திருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.150 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். *  சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முதல்வர் இல்லமாக அமைந்திருக்கும் புராதன கட்டிடம் புனரமைக்கப்படும்.*  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள 59 காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.*  திட்ட அனுமதி விண்ணப்பங்கள் மற்றும் பணி நிறைவு சான்றிதழ் போன்ற காகித  பயன்பாடில்லாமல் நிகழ்நிலை மூலம் வழங்க ஏதுவாக சிஎம்டிஏ மூலம் ஒற்றைச்சாளர  இணையத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.*  சிஎம்டிஏவில் 1,200 சதுர  அடிக்கு குறைவான கட்டிடத்திற்கு அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க தவறும் பட்சத்தில்  தானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும்.

Leave A Reply

Your email address will not be published.