உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம்

0 2

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக முதல்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள்,  மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை www.tnsec.tn.nic.in  இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு  பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடக்கிறது. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் முகாமில் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த  4 முதல் 5 அதிகாரிகள்  கலந்து கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.