கமல்ஹாசன் பொதுக்கூட்டம் கோவையில் 13ல் நடக்கிறது

0 21

சென்னை: கோவையில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் 13ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவுகள் மூலம் தமிழகம் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.  கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு பல்வேறு  இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய அவர், திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தனது கட்சியின் கொள்கைகள் மற்றும்  எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவித்தார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், அடுத்தடுத்து பொதுக்கூட்டம் நடத்தி பேச முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். அதன்படி  வரும் மே மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிறகு 13ம் தேதி மாலை கோவையில்  நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த தகவலை அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் விசாரித்தபோது, கமல்ஹாசன் சுற்றுப்பயண விவரம் மற்றும் பொதுக்கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.