மீண்டும் தேசிய தலைவராக தேர்வு காதர் மொகிதீனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

0 22

சென்னை: “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, திமுக  சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இந்திய அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த  நேரத்தில், மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருக்க வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்ட காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டு  இருப்பது, மிகப்பொருத்தமான நிகழ்வு. பேராசிரியரின் பணிகள் மென்மேலும் சிறந்து, மேலும் பல வெற்றிகளை அவர் பெறவேண்டும் என்று மீண்டும்  ஒருமுறை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.