தேசிய தலைவரான அம்பேத்கரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம்: தமிழிசை வேண்டுகோள்

0 22

சென்னை: “தேசிய தலைவரான அம்பேத்கரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம்” என்று தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் ஒரு சிறந்த சட்ட நிபுணர் மட்டுமின்றி சிறந்த பொருளாதார மற்றும் தத்துவ மாமேதை, இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி, இந்திய  அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத மாபெரும் வரலாற்று சின்னம் அம்பேத்கர், இன்னும் பல சிறப்பு மிக்க ஒரு தேசிய தலைவரை தமிழகத்தில்  சாதியம் வளர்த்து, சாதி தீ  பரப்பும் சாதி கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அவரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம் அவர் ஒரு தேசிய  தலைவர். உச்ச நீதிமன்றம் ஒருதலைபட்சமாக சாதிய வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போக செய்ய கூடாது என்று மத்திய மோடி அரசு குரல்  கொடுத்து உள்ளது. ஆனால் பாஜவை தமிழகத்தில் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதி போல் சித்தரித்து அரசியல் ஆதாயம் பெற வேண்டாம்.இதை  பொறுத்துக்கொள்ள முடியாத விசிக கட்சியினர் பல இடங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.பாஜ அம்பேத்கரை ஒரு தேசிய தலைவராக பெருமைப்படுத்துகிறது. விசிக போன்ற கட்சிகள் ஒரு சாதிக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவது  கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.