காமன்வெல்த் போட்டியில் பதக்கம் தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை : ஜி.கே.வாசன் வாழ்த்து

0 19

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பதக்கம் பெற்றிருப்பது தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது  என்று ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆஸ்திரேலியாவில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து  வருகிறது. இப்போட்டியில் இதுவரை இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் வென்று மொத்தம் 59 பதக்கங்களுடன் பட்டியலில் 3ம் இடத்தில்  இருப்பது இந்தியர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் 3ம் இடத்தில் இந்தியாவை கொண்டுவந்த இந்திய வீரர்,  வீராங்கனைகளின் கடின உழைப்பும், விடா முயற்சியும் போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கம் உட்பட சில பதக்கங்களை பெற்றிருப்பது தமிழகத்துக்கு நாடு  முழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நம் நாட்டில் பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி  வரை விளையாட்டுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் இந்தியா உலக அளவில்  விளையாட்டுத்துறையில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.