அரவக்குறிச்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு பின் வைகோ பேட்டி

0 7

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் நடைபெறும் ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு பின் வைகோ பேட்டி அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன் வராது என்றும் புகார் கூறினார். காவிரி தொடர்பான தமிழக சட்டப்பேரவை தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என்று கூறினார். ஆன்லைன் வர்த்தகத்தை முன்பு எதிர்த்த அருண்ஜேட்லி அமைச்சராணதும் ஆதரிப்பது சந்தர்ப்பவாதம் என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் வணிகத்தில் 20 கோடி வர்த்தகர்பள், சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். தமிழக வாழ்வுரிமைக்காக இளைஞர்கள் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.