கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைந்தால் காவிரியில் தடையின்றி தண்ணீர் வரும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

0 12

திருவெறும்பூர்: கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைந்தால் காவிரியில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். பா.ஜ.க. சார்பில் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி இன்று (16ம் தேதி) கல்லணை தொடங்கி வரும் ஜூன் 2ம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைகிறது. பேரணியை மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் குறைகளை நீக்கி மக்களுக்கு காப்பீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து சீராய்வு கமிட்டி அமைக்க வேண்டும். மத்திய அரசின் பென்சன் திட்டத்தை அனைத்து விவசாயிகளும் மீனவர்களும் பெற்றிட மாநில அரசே பிரிமியம் தொகையை வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தி ஏரி குளம் நீர் வழிதடங்களை தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கல்லணையில் தொடங்கும் பேரணி 2ம் தேதி பேராவூரணியில் நிறைவடைகிறது. பேரணி கரி நாளில் தொடங்குவதால் முன்கூட்டியே 15ம் தேதியான நேற்று கல்லணையில் சப்தநதி சப்தசகாரா ஆதர்சன யாகம்,  மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பொன்ராதாகிருஷ்ணன் கூறியதாவது:  உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி, கல்லணையிலிருந்து 24 நாட்கள் நடக்கிறது. அந்த பேரணி வெற்றி அடைய வேண்டும்.யாகசாலையில் அமர்ந்திருந்தப்போது ஒரு நல்ல செய்தி வந்தது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு காவிரியில் தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் வரும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.