நலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார்

0 12

சென்னை: நலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார். இதுகுறித்து திமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த  பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும்  ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து திமுக தலைவர் கருணாநிதி  பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய்  வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல்  தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால்  2018, ஏப்ரல் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம்  மொத்தம் ரூ.2 லட்சம் திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை  தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ.4  கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.