ஜூன் 1ம் தேதி திருவாரூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுகூட்டம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

0 12

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 95ம் பிறந்த நாள் விழா வருகிற ஜூன் 1ம் தேதி திருவாரூரில் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின், அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3ம் தேதி 95வது வயது பிறக்கிறது. கருணாநிதி பிறந்த நாளை ஆண்டுதோறும் திமுகவினர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும். உடல்நிலை காரணமாக கருணாநிதி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது முக்கிய தலைவர்களை சந்திப்பதுடன் அண்ணா அறிவாலயம், சி.ஐ.டி. காலனி இல்லம் சென்று வருகிறார்.இந்த ஆண்டும் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வருகிற ஜூன் 1ம் தேதி திருவாரூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.கூட்டத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னணியினர் பங்கேற்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.இந்த விழாவுக்கான அழைப்பிதழை மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இல்லம் சென்று நேரில் சந்தித்து கொடுத்தார். அப்போது துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.