ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது : க.அன்பழகன் அறிவிப்பு

0 12

சென்னை : திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவது செயற்குழுவின் முக்கிய அம்சமாகும்.இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டில்  திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை  நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து வரும் 14-ம் தேதி செயற்குழு கூட்டும் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞர் கடந்த 7-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரின் மறைவிற்கு பின் திமுக  செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ளது. இரங்கல் தெரிவிக்கவே கூட்டம் : கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டத்திற்கு முடிவு செய்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் கருணாநிதி நினைவிடத்தில் படிப்படியாக வசதிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.