`முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்! – கேரள முதல்வர் கோரிக்கை

0 11

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருக்கிறார் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாகக் கேரள பகுதிகள் வெள்ளமெனக் காட்சியளிக்கிறது இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 16629 கன அடியாக உள்ளது இதே நேரத்தில் 2200 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது அணையின் மொத்த உயரம் 155 அடியாகும் 142 அடிவரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்புக் கருதி 139 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீரைத் தேக்க வேண்டும் என கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ஆனால் தமிழகம் தரப்பில் அணை வலுவாக இருப்பதால் 142 அடிக்கு மேலும் தண்ணீர் நிரப்பலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது ஏற்கெனவே கேரளாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவழியும் நிலையில் அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது இதனால் கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டிருக்கிறது தொடர் மழை காரணமாக கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறதுஇந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியிருப்பதால் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என்று கேரளா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது கேரளா வெள்ளம் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் உதவி கோரியிருக்கிறார் மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன்கடிதம் எழுதியிருக்கிறார்முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியிருப்பதால் அணையின் 13 மதகுகளும் நள்ளிரவு 230 மணியளவி திறக்கப்பட்டுள்ளன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 4000 குடும்பங்கள் பத்திரமாக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசரக் கூட்டம் இன்று கூடியது இதில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை தமிழகம் வெளியேற்ற வேண்டும் ஆனால் குறைந்த அளவே வெளியேற்றி வருகிறது இதனால் பாதிப்பு ஏற்படும் என கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து முல்லைப்பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார் அதில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே நீர்மட்டத்தை 139 அடியிலேயே பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார் மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலையிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.