“இனி அடுத்து அரசியல்தான்!”- மும்பையிலிருந்து ராக்கெட் ராஜா அதிரடி

0 12

தற்போது மும்பையில் தங்கி கையொப்பமிட்டு வரும் ராக்கெட் ராஜா விரைவில் தமிழகம் வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் நெல்லை மாவட்டம் ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா கராத்தே செல்வினுடன் இணைந்து செயல்பட்டுவந்த இவர் 1997 மார்ச் 26-ம் தேதி கராத்தே செல்வின் கொல்லப்பட்ட பின்னர் `நாடார் மக்கள் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவருகிறார் இந்தநிலையில் சென்னையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த மே 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டார் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக அவரை விருகம்பாக்கம் போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர் தற்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் `அனைவருக்கும் வணக்கம் நான் மும்பையிலிருந்து பேசுகிறேன் நான் கைது செய்யப்பட்டது முதல் வெளியில் வருவது வரைக்கும் எனக்காக வேதனையுடன் காத்திருந்த மக்களுக்கும் இளைஞர் பட்டாளத்துக்கும் வழக்கறிஞர்கள் சமுதாய நண்பர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி நான் மும்பையில் தங்கி கையொப்பம் போட்டுக்கொண்டிருக்கிறேன் விரைவில் தமிழகம் வர இருக்கிறேன் சமுதாய நண்பர்கள் அத்தனை பேரையும் நான் பார்க்க வருகிறேன் அடுத்த நகர்வாக நமது சமுதாயத்தை அரசியல் ரீதியாக பலமாக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம் சட்டசிக்கல்கள் தீர்ந்தவுடன் தமிழகம் வந்து அனைவரையும் சந்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்  

Leave A Reply

Your email address will not be published.