அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர்

0 12

சென்னை: தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் நேற்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில், அரசியல் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர். நாட்டின் 72வது சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் விவரம் வருமாறு: * திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த சுதந்திரதின விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் ஜெ.அகஸ்டின்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.* தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தேசிய கொடி ஏற்றி  வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, அகில  இந்திய செயலாளர்கள் டாக்டர் செல்லகுமார், ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள்  எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரூபி மனோகரன், வீரபாண்டியன், நிர்வாகிகள்  சொர்ணா சேதுராமன், தங்க தமிழ்ச்செல்வன், கஜநாதன், டெல்லிபாபு, மானசா,  அமீர்கான், ஆலங்குளம் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். *  தமாகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரன விழாவில் கட்சி தலைவர்  ஜி.கே.வாசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மூத்த துணை தலைவர்  ஞானதேசிகன், கத்திப்பாரா ஜெனார்த்தனம், தலைமை நிலைய செயலாளர்  ஜிஆர்.வெங்கடேஷ், வர்த்தக அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, முனவர் பாட்ஷா, ராணி  கிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ  சாகோ, அண்ணாநகர் ராம்குமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* தேமுதிக சார்பில் கோயம்பேட்டில்  உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சுதந்திரதின விழா  கொண்டாடப்பட்டது. இதில் கட்சி துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தேசிய கொடி  ஏற்றி இனிப்பு வழங்கினார்.* சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தி.நகர் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் சரத்குமார், தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில், மாநில பொருளாளர் சுந்தரேசன், துணை பொதுச் செயலாளர் சேவியர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.        * தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற 72வது சுதந்திரதின விழாவில் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநில பொருளாளர் முகமது அலி, மாவட்ட செயலாளர் ஏழுமலை (எ) சாகுல் ஹமீது, ஆபுல்காசிம், மாலிக்பாஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன.* எர்ணாவூர், வடக்கு பாரதியார் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி.சாமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.* சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.* சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.