தேசியக்கொடியை கீழே இறக்கிய அமித்ஷா

0 11

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாஜ தலைவர் அமித் ஷா தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முயன்றார். அப்போது, தவறுதலாக கொடியை மேலே ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறக்கிவிட்டார். இதனால், தேசியக்கொடி கீழே வந்து விழுந்தது. பின்னர், சுதாரித்த அவர் கொடியை மேலே ஏற்றினார். இது தொடர்பாக காங்கிரசின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘தேசியக்கொடியை கையாளத் தெரியாதவர்கள் நாட்டை எப்படி கையாண்டு வழி நடத்துவார்கள்?’ என்று கேட்டுள்ளது. மேலும், அமித்ஷா தேசியக்கொடியை கீழே இறக்கிய வீடியோ காட்சியையும் இதனுடன் இணைத்துள்ளது.டெல்லி முதல்வர் கருத்து: ‘டெல்லியில் தேசியக் கொடி கீழே விழுந்த சம்பவமானது, பாரத மாதா சோகத்துடன் இருப்பதை பிரதிபலிப்பதாக உள்ளது” என்று கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுபற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “இயற்கை விசித்திரமான வழிகளில் வேலை செய்யும். ஒருவர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் சரி, இயற்கையின் முன் தலைவணங்கி தான் ஆக வேண்டும். அமித்ஷாவின் கைகளால் பறப்பதற்கு தேசியக்கொடி மறுத்துவிட்டது. இந்த தேசியக்கொடியின் மூலமாக தான் சோகத்தில் இருப்பதாக பாரத மாதா தெரிவித்துள்ளார்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.